Headlines News :
Home » » ஆண்களே அழகாக ஜொலிக்க ஆசையா?

ஆண்களே அழகாக ஜொலிக்க ஆசையா?

Written By kumaran on Sunday, June 9, 2013 | 10:24 AM




கடும் வெயில் மற்றும் குளிரை வாடிக்கையாக கொண்டிருக்கும் இன்றைய பருவ நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பதால் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அந்த வகையில் சரும பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற விஷயமாகும். சரும பாதுகாப்பு என்றதும் அது பெண்களுடைய விஷயம் என்று எந்தவொரு ஆணும் நினைத்தால் அவர் மிகவும் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்!
 ஏனெனில், ஆண்களுக்கு தோலில் உள்ள துளைகள் மிகவும் பெரியதாக உள்ளதால்,அவர்கள் தான் அதிகளவிலான தோல் சிதைவுகளுக்கும் மற்றும் அடைப்புகளுக்கும் ஆளாகிறார்கள்.

அவர்கள் எப்பொழுதுமே பெண்களைப் போல அதிகப்படியான எண்ணையை உறிஞ்சும் வகையிலான பவுடர்களைப் பயன்படுத்துவதில்லை. மேலும், இயற்கையாகவே கோடையின் வெப்பமான நேரங்களில், அதிக நேரம் வெளியில் சுற்றக்கூடிய வேலைகளை செய்யும் ஆண்கள் பிரச்சினைக்குரிய சருமத்தினைப் பெறும் நிலையிலுள்ளவர்கள்.

எனவே ஆண்களே! சருமத்தினை எப்படி ஆரோக்கியமாக வைத்திருப்பது என்று முடிவு செய்துவிட்டீர்களா? மிகவும் யோசிக்க வேண்டாம்! தினசரி நடவடிக்கைகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சருமத்தினை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

தொடக்கத்தில் ஆண்களின் தோல் மிகவும் எண்ணெயுடையதாகவே இருக்கும். எனவே தினமும் இரண்டு முறை முகத்தை சுத்தம் செய்யும் க்ளின்ஸர் அல்லது ஃபேஷ் வாஷ் கொண்டு சுத்தம் செய்வதும் மற்றும் சோப்பைப் போட்டு சுரண்டாமல் இருப்பது நலம் தரும் செயலாகும். இது தோலிலுள்ள துளைகளை சுத்தம் செய்வதுடன், அதிகப்படியான எண்ணெயையும் நீக்கிவிடும். மேலும் சருமத்திற்கு ஏற்ற க்ளின்ஸர்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது சரும பாதுகாப்பில் மிகவும் முக்கியமான செயலாகும். அது சருமத் துளைகளுக்குள் ஆழமாக சென்று, இறந்த செல்களை நீக்கவும் தயார் படுத்துகிறது.

ஆண்களின் தோல் பெண்களின் தோலை விட கடினமானதாகவும், மொத்தமானதாகவும் இருக்கும். ஆகவே தீவிரமான மற்றும் கிளைக்கோலிக் அமிலங்களையுடைய டோனர்களை பயன்படுத்தினால், சருமத்தில் தங்கி சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து,சருமத்திற்கு பாதுகாப்பு தரும்.

சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை கோடைகாலங்களில் இயற்கையான முறையில் ஸ்கரப் செய்து நீக்குவது முக்கியமான விஷயமாகும். 3 நாட்களுக்கு ஒருமுறை ஸ்கரப் செய்வது அல்லது அருகிலுள்ள ஆண்கள் அழகு நிலையத்திற்கு சென்று தொழில்முறை வல்லுநர்களிடம் சென்று ஸ்கரப் செய்வது சரியான முறையாகும். மேலும் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு கிடைக்க வேண்டுமானால், இறந்த சரும செல்களை நீக்கிவிட்டு,இளமையான செல்களை வளர்த்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.

SPF அளவு 15 அல்லது அதற்கும் அதிகமாக உள்ள மெல்லிய எடையுடைய ஈரப்பதம் உண்டாக்கும் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். சருமத்தை ஈரப்பதத்துடனும்,சுருக்கங்கள் இல்லாமலும், முகத்தில் கோடுகள் விழுவதை தடுத்தும் வைத்திருப்பதன் மூலமும், இறந்த சரும செல்களை நீக்கிய பின்னர் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். குறிப்பாக வெயிலில் செல்லும் போது தடவி செல்ல வேண்டும்.
கோடைகாலங்களில் தினமும் ஷேவிங் செய்வதை தவிர்ப்பது நலம். இந்த காலக்கட்டங்களில் ஒவ்வொரு ஷேவிங்கிற்குப் பிறகும் சருமத்தை சரி செய்யவும்,குணப்படுத்தவும் செயல்பட வேண்டியிருக்கும். எனவே அளவாக அவ்வப்போது ஷேவிங் செய்வது அரிப்பு ஏற்படுவதை தடுக்கும். இல்லையெனில் சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டு கடுமையாக அரிப்பை உண்டாக்கும்.

ஷேவிங்கிற்குப் பிறகு பயன்படுத்தப்படும் லோசன்கள், ஷேவிங்கால் சருமம் இழந்த ஈரப்பதத்தை மீட்கவும் மற்றும் அதற்கு தேவையான எண்ணையை வழங்கும் பணியையும் செய்கின்றன. மேலும் அந்த லோசன்கள் தோலை சூரியனின் தாக்குதலிலிருந்தும் காப்பாற்றுகின்றன. அதிலும் சருமத்திற்கு ஏற்ற வகையிலான இயற்கையான மற்றும் சத்தான எண்ணெய் நிரம்பிய லோசன்களை கண்டறிந்து பயன்படுத்துங்கள்.

பெண்கள் மட்டும் தான் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆண்களும் வெளியே வெயிலில் சுற்றும் போது, சன் ஸ்கிரீன்களை பயன்படுத்த வேண்டும். உதடுகள் வறட்சியடையாமலும்,சூரியக்கதிர்களின் தாக்கம் இல்லாமலும் இருக்க லிப் பாம் பயன்படுத்த வேண்டும்.

உடல் துர்நாற்றத்தை துரத்தியடிக்க டியோடரண்டுகளை பயன்படுத்துவது மட்டும் தீர்வாகாது. இந்த உடல் துர்நாற்றமானது, வியர்வையுடன் பாக்டீரிய கலப்பதன் மூலமாகவே உருவாவதால், ஆரம்பத்திலிருந்தே இதனை தடுக்க முயற்சி செய்ய வேண்டும். குளிக்கும் போது பாக்டீரிய எதிர்பொருட்களையுடைய க்ளீன்ஸர்களையோ அல்லது பாடி வாஷையோ பயன்படுத்துவதுதான் இதற்கு சிறந்த வழிமுறையாகும். மேலும் ஹெர்பல் பவுடரை போட்ட பின்னர், சிறிது நேரம் கழித்து டியோடரண்டுகளை பயன்படுத்தவும்
உண்ணும் உணவு சரும பராமரிப்பில் பெரும் பங்காற்றுகிறது. தக்காளி,வெண்ணெய்,பழங்கள், கொட்டைகள், பாதாம் மற்றும் வாதுமை கொட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது முதுமை தோற்றம் தடைபடுவதோடு, உடலை பலமாக இருக்கச் செய்கின்றன. எண்ணைய் அதிகமாக உள்ள மற்றும் மிகவும் வறுக்கப்பட்ட உணவுகளை கோடைகாலங்களில் உண்ணும் போது, செரிமான உறுப்புகள் மெதுவாக இயங்குகின்றன.

முகப்பருக்கள் வராமல் இருப்பதற்கு, அதிக எண்ணெய் பசையுள்ள அழகுப் பொருட்களை பயன்படுத்தாமல்,எண்ணெய் பசை குறைவாக உள்ள பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். இதனால் முகத்தில் பருக்கள் வராமல் இருப்பதோடு, சருமமும் பாதுகாப்புடன் இருக்கும்


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. gooooooooooooooooooo - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template