நடிகைகளுக்கு போராட்ட குணம் வேண்டும்! – வித்யாபாலன்
Written By kumaran on Sunday, June 9, 2013 | 6:22 AM
திரையில் பட்டாம்பூச்சிகளாக பளிச்சிடும் நடிகைகளின் வாழ்க்கை திரைக்குப்பின்னால் ரொம்ப வேதனைக்குரியது என்று பாலிவுட் நடிகைகள் கூறியுள்ளனர். அதிலும், கஜினி இந்தி படத்தில் நடித்த ஜியாகானின் தற்கொலை பற்றி, பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான வித்யாபாலன் கூறுகையில், ஜியாகான் ரொம்ப நல்ல திறமையான நடிகை. குறுகிய காலத்தில இந்தி சினிமாவில் பிரபலமானவர். என்றபோதும், சினிமாதான் வெற்றி தோல்வி நிறைந்ததாயிற்றே. அதில் தோல்வி என்று வருகிறபோது, நடிகைகள் மனஉளச்சலுக்கு ஆளாகி விடுவார்கள். அது கூடாது. அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் தாக்குப்பிடித்த நிற்கக்கூடிய மனநிலைக்கு வர வேண்டும். அப்போதுதான் விட்ட இடத்தை மீண்டும் தொட முடியும். அது இல்லாமல் மனசுடைந்து போனால் இதுமாதிரியான தற்கொலை எண்ணங்கள்தான் தலைதூக்கும். ஆனால், யாராக இருந்தாலும் இந்த மாதிரியான தவறான எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. போராட்டக்குணம் ஒவ்வொருத்தருக்கும் வரவேண்டும. அப்போதுதான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் வித்யாபாலன்.
Labels:
cinema
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !